திருடன்

திருடன் ஒருவன் ஒரு வீட்டுக்கு திருடச் சென்றான்.
அங்கு காவலுக்கு ஒரு நாய் இருந்தது. அது இவனைப் பார்த்து எதுவுமே செய்யவில்லை.
வெறுமனே பார்த்துக் கொண்டே இருந்தது.
இவனுக்கு திருடச் செல்லலாமா.? வேண்டாமா.?
உள்ளே போனவுடன் நாய் குரைத்தால் என்ன செய்வது..? இப்போதே குரைத்தால் அடுத்த வீடாவது பார்க்கலாம். அதுவும் செய்யாமல் இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டிருக்கிறான்..!
யோசித்தவன் முடிவாக ஒரு பிஸ்கட்டை எடுத்து நாயிடம் வீசி இருக்கிறான். அதை கண்டவுடன் நாய் திருடனை பார்த்து சத்தம்போட்டு குரைத்து, கடிக்க பாய்ந்தது..!
அப்போது திருடன் நாயிடம்,
''ஏன் சும்மா வேடிக்கை பார்த்த நீ, இலவசமாக பிஸ்கட்டை எடுத்து வீசியவுடன் என்னை கடிக்க வருகிறாய்.?'' என்று கேட்டான்..
அதற்கு அந்த நாய் சொல்லியது,
''நீ சும்மா இருந்தபோது வீட்டு உரிமையாளருக்கு உறவினராக இருக்குமோ அல்லது நண்பராக தெரிந்தவராக இருக்குமோ என்று நினைத்திருந்தேன்..
எப்போது நீ இலவசமாக ஒரு பொருளை கொடுத்தாயோ, அப்போதே உறுதியாகி விட்டது நீ திருடன் தான் என்று..!"

யோசிக்க வேண்டிய விஷயம் தான்..!!

Comments

Popular posts from this blog

I Know, I Know

கணித மேதை ராமானுஜன்

The Perfect Pair Of Sandals