Posts

Showing posts with the label Jeeva Samadhi

ஜீவ ஸமாதி - Jeeva Samadhi

பகுத்தறிவுவாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் நண்பர் ஒருவர் நேற்று என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி சமாளிக்கிறீர்களே? இந்தக் கேள்விக்கு சரியான பதில் தர முடியுமா? நான் சொன்னேன் ஐயா சாக்கு போக்கெல்லாம் நான் சொல்வதில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன். உங்களுக்குக் கற்றுத்தரப்படாததாலோ அல்லது உங்களால் இயாலதது என்பதாலோ அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். சரி கேள்வி என்ன? ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா? அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே? என்று கேட்டு விட்டு ஒரு நமட்டுச் சிரிப்பு வேறு சிரித்துக் கொண்டார். அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு. நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட...