கணித மேதை ராமானுஜன்
உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா? ( கண்டிப்பாக உங்கள் குழந்தைகளிடம் இந்த கட்டுரையை பகிருங்கள் ) இன்றைக்கு ஒரு பள்ளி மாணவனுக்கோ அல்லது கல்லூரி மாணவனுக்கோ படிப்பதற்குரிய சௌகரியங்களுக்கும் அடிப்படை வசதிகளுக்கும் வீட்டிலோ வெளியிலோ எந்த பஞ்சமும் இல்லை. அரசாங்கமே அனைவருக்கும் லேப்டாப் வேறு தருகிறது. சோற்றுக்கோ சுகத்துக்கோ பஞ்சமில்லை. சோறு சலித்தால் இருக்கவே இருக்கிறது கே.எப்.சி. & பீட்சா ஹட். அம்மா தரும் காபி சலித்தால் இருக்கவே இருக்கிறது காஃபி டே. கேளிக்கைக்கும் பஞ்சமில்லை. தொலைகாட்சி சலித்தால் இருக்கவே இருக்கிறது மல்டிப்ளெக்ஸ். மொபைல் ஃபோன் வடிவத்தில் ஒரு சினிமா தியேட்டரே நமது கைகளில் தவழ்கிறது. காமிராவிலிருந்து ஆப்பிள் ஃபோன், ஐபாட் வரை எதற்கும் பஞ்சமில்லை. மின்சாரமின்றி நம்மால் ஒரு மணிநேரம் கூட இருக்கமுடியவில்லையே… அந்தக் காலத்தில் சாதனையாளர்கள் பள்ளி செல்லும் நாட்களில் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள்? பாரதி… ராமானுஜம்… இவர்களை போன்றவர்களை இறைவன் செல்வந்தர்களாக படைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை குறைந்த பட்ச...